3. காசோலை குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தற்போது நடைமுறையிலுள்ள சட்டப்படி வங்கி காசோலைகள் அதில் எழுதப்பட்டிருக்கும் தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆகவே அந்த காலக்கெடுவிற்குப் பிறகு பெறப்படும் காசோலைகளை பட்டுவாடா செய்யும் கடமை வங்கிகளுக்கு இல்லை. கவனக்குறைவாக இத்தகைய காசோலைகளை பட்டுவாடா செய்வதன் மூலம் வாடிக்கையாளருக்கு ஏற்படக்கூடிய இழப்புக்கும் வங்கிகள் பொறுப்பாகக் கூடும்.
4. வாடிக்கையாளருடைய கணக்குகள் நிறுத்தப்பட்டிருக்கலாகாது.
சில சமயங்களில் ஒரு வாடிக்கையாளருடைய கணக்கு சில காரணங்களால் நிறுத்தப்படக் கூடும் (Blocked or Stopped from further operations). இது இருவகைப்படும்.
4.1. முழுவதுமாக நிறுத்தப்படுதல் (Operations Stopped).
கணக்கில் வரவு-செலவு எதையுமே வாடிக்கையாளரால் செய்ய முடியாது.
4.2 குறிப்பிட்ட பரிவர்த்தனைகள் நிறுத்தப்படுதல் (Partially Stopped)
வரவு அனுமதிக்கப்படும். கணக்கிலிருந்து பணம் எடுக்க அனுமதிக்கப்படாது.
எந்த காரணங்களுக்காக இத்தகைய தடைகள் விதிக்கப்படுகின்றன?
1. வாடிக்கையாளருக்கு எதிராக அரசாங்க இலாக்காக்களிலிருந்து ஏதேனும் தாக்கீது (Notice) வருவதுண்டு. சாதாரணமாக இத்தகைய தாக்கீது அவர் செலுத்தக்கூடிய வருமான அல்லது விற்பனை வரி நிலுவையில் நிற்கும் சூழலில் சம்பந்தப்பட்ட இலாக்காக்களிடமிருந்து நேரடியாகவோ அல்லது நீதிமன்றங்கள் வழியாகவோ பெறப்படுகின்றது. தாக்கீதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை காட்டிலும் வாடிக்கையாளருடைய கணக்கில் கூடுதலாக தொகை நிலுவையில் நிற்கும்பட்சத்தில் தாக்கீதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை அவர் எடுத்துவிட அனுமதிக்கப்படமாட்டார். மீதமுள்ள தொகையை அவர் பட்டுவாடா செய்ய அனுமதிக்கப்படுவார். மாறாக கணக்கில் குறைவாக இருக்கும்பட்சத்தில் அவர் கணக்கில் பணம் செலுத்த அனுமதிக்கப்படுவார்.
2. வாடிக்கையாளர் மீது தொடுக்கப்படும் வழக்குகளில் அவருக்கு எதிராக வசூல் தாக்கீது (Garnishee Order) சம்பந்தப்பட்ட நீதிமன்றம் வழங்குவதுண்டு. இத்தகைய சூழலிலும் மேற்கூறிய வகையில் கணக்கு முடக்கிவைக்கப்படுகிறது. (இது ஒரு மிக முக்கியமான நிபந்தனையாகும். இதை முழுவதுமாக விவரிக்காமல் இப்போது விடுகிறேன். பிறகு அவசியம் நேரும்போது விவரிக்கிறேன்)
3. வாடிக்கையாளரின் வர்த்தகம் அல்லது செயல்பாடு அரசின் கொள்கைகளுக்கோ (Policy) சட்டங்களுக்கோ (Laws in force) எதிராக இருக்கும்பட்சத்தில் அவருடைய மொத்த கணக்குமே முடக்கப்பட்டுவிடும்.
4. சில சமயங்களில் வங்கிக்கு வரவேண்டிய கடன் நிலுவைகளுக்கும் கூட சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் கணக்கு முடக்கப்படுவதுண்டு. உதாரணத்திற்கு வாடிக்கையாளர் அதே வங்கி கிளையிலிருந்தோ அல்லது அந்த வங்கியின் மற்றொரு கிளையிலிருந்து பெற்ற கடனை முழுவதுமாக அடைக்க தவறியிருந்தால் அதை வசூலிக்கும் முகமாகவும் அவருடைய கணக்கு முடக்கப்பட்டுவிடும்.
ஆனால் இத்தகைய சூழலில் எதற்காக வாடிக்கையாளருடைய கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்பதை அவருக்கு தெரிவிக்க வேண்டியது வங்கியின் கடமைகளுள் ஒன்று.
தொடரும்..
வங்கி சேவைகளைப் பற்றி வங்கியைப் பற்றி அறியாதவர்களுக்கு விளக்குவதே இந்த பதிவின் நோக்கம். எளிய தமிழில் வங்கி சேவைகளை அனைவரும் புரிந்துக்கொள்ளும் வகையில் எழுதுவதுதான் என்னுடைய நோக்கம்.
Tuesday, September 21, 2010
வங்கியுலகம் - காசோலைகள்- வங்கியின் கடமைகள் - 2
Monday, September 20, 2010
வங்கியுலகம் - காசோலைகள்- வங்கியின் கடமைகள்.
விற்பவர்-வாங்குபவர் (Seller-Buyer) உறவில் சம்பந்தப்பட்ட இருவர் தங்களுடைய பரிமாற்றங்களின் விளைவாக ஏற்படும் நிலுவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள (settlement of business transactions) மிகவும் உதவியாயிருக்கும் காசோலைகளை அதை வழங்கியவருடைய (விற்பனையாளர்) கணக்கிலிருந்து வசூல் செய்து பெற்றுக்கொண்டவருடைய (வாங்கியவர்) கணக்கில் வரவு வைக்கும் பணியை ஆற்றக் கூடிய ஒரு இடை நபராக, முகவராக (Mediator/Agent) வங்கிகள் செயல்படுகின்றன.
வங்கிகளின் இந்த செயல்பாட்டில் அவர்களுக்கென சில முக்கியமான கடமைகள் உள்ளன.
1. வாடிக்கையாளர்களுடைய காசோலைகளுக்கு பணம் பட்டுவாடா செய்தல்.
Term Deposit எனப்படும் வைப்புநிதி கணக்குகளைத் தவிர்த்து மற்ற கணக்குகள் பெரும்பாலும் வாடிக்கையாளர் தங்களுடைய தினசரி தேவைகளுக்கென பயன்படுத்துவையாகும். உதாரணம்: சேமிப்பு கணக்கு (Savings Accounts), நடைமுறை கணக்குகள் (Current Deposits/Overdrafts). இவற்றிலிருந்து ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய குடும்ப/வர்த்தக தேவைகளுக்காக பணம் பட்டுவாடா செய்யும் நோக்கத்துடன் காசோலைகளை வழங்குவதுண்டு. கீழ்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை பட்டுவாடா செய்யும் கடமை வங்கிக்கு உள்ளது.
1.காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை வாடிக்கையாளரின் கணக்கில் கணக்கில் இருக்க வேண்டும்.
2. நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு (Laws in force) காசோலை உட்பட்டு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த இரு நிபந்தனைகளையும் சற்று விரிவாக பார்ப்போம்.
1. கணக்கில் நிலுவையிலுள்ள தொகை (Balance)
வாடிக்கையாளரின் கணக்கிலுள்ள நிலுவை தொகை அவருக்கு சாதகமாகவோ (Positive) அல்லது பாதகமாகவோ (Negative) இருக்க வாய்ப்புண்டு.
சாதாரணமாக, ஒரு வாடிக்கையாளருடைய சேமிப்பு கணக்குகளில் (Savings account) மற்றும் அவருடைய தொழில்/வர்த்தகங்களுக்கு பயன்படும் நடைமுறை கணக்குகளில் (Current account) உள்ள நிலுவை தொகை அவருக்கு சாதகமாகவே இருக்கும்.
ஆனால் சிலசமயங்களில், நிலுவை தொகை அவருக்கு பாதகமாகவும் (Negative) இருக்க வாய்ப்புண்டு. அதாவது, அவருடைய கணக்கிலிருந்து எடுக்கக் கூடிய தொகைக்கு (Available Balance) மேல் கணக்கிலிருந்து பட்டுவாடா செய்யப்பட்டிருக்கும் சூழலில் அது அவருக்கு பாதகமாக இருக்கும். இத்தகைய நிலுவையை Overdrawn Balance என வங்கிகள் குறிப்பிடுகின்றன. அதாவது வாடிக்கையாளருடைய அவசர தேவைகளுக்கென வங்கி அதனுடைய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஒரு தாற்காலிக கடன் வழங்கியுள்ளது என்று பொருள். இதை Temporary Overdraft என்றும் கூறுவதுண்டு.
சாதாரணமாக, இத்தகைய தாற்காலிக கடன்கள் வாடிக்கையாளரின் நடைமுறை கணக்குகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால் தவிர்க்கமுடியாத சில காரணங்களுக்காக (வருமானவரி அல்லது விற்பனைவரி நிலுவைகளுக்காக வழங்கப்படும் காசோலைகளை பட்டுவாடா செய்ய) சேமிப்பு கணக்குகளிலும் இத்தகைய தாற்காலிக கடன்கள் வழங்கப்படுவதுண்டு. இவற்றை பதினைந்து தினங்களுக்குள் வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் வங்கிகள் வழங்குகின்றன.
இவையல்லாமல் ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய வர்த்தக தேவைகளுக்காகவும் வங்கியிடமிருந்து கடன் பெறுவதுண்டு. சாதாரணமாக இத்தகைய கடன்கள் ஓராண்டு காலத்திற்கு வழங்கப்படுகின்றன. இவை ஓவர்டிராஃப்ட் (Overdraft Arrangement) என அழைக்கப்படுகின்றன. அதாவது வாடிக்கையாளருடைய நடைமுறை கணக்கில் (Current account) வங்கியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஓராண்டு காலத்திற்கு கடன் பெற்றுக்கொள்ளலாம் என்பது பொருள்.
இத்தகைய Overdraft கணக்குகளிலிருந்து அதிகபட்சமாக எவ்வளவு தொகை வங்கி பட்டுவாடா செய்யும் என்பதை (Maximum permissible limit) வாடிக்கையாளர் மற்றும் வங்கிக்கு இடையில் முன்கூட்டியே ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்படுகிறது. இது Overdraft Agreement என அழைக்கப்படுகிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாடிக்கையாளர் வழங்கும் காசோலைகளை பட்டுவாடா வங்கி செய்ய வேண்டும்.
2. காசோலை வழங்கப்பட்டுள்ள கணக்கில் அதற்கு தேவையான தொகை நிலுவையில் இருக்க வேண்டும்.
ஒரு வாடிக்கையாளருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் வங்கியில் இருக்க வாய்ப்புண்டு. உதாரணம்: ஒரு வாடிக்கையாளர் அதே வங்கிக் கிளையில் ஒரு வைப்பு நிதி கணக்கு, ஒரு சேமிப்பு கணக்கு மற்றும் ஒரு நடைமுறை கணக்கு என மூன்று கணக்குகளை வைத்திருந்தார். அவர் தன்னுடைய வர்த்தக நடைமுறை கணக்கிலிருந்து ரூ.1.00 லட்சத்டிற்கு காசோலை ஒன்றை வழங்கியிருந்தார். ஆனால் அவருடைய நடைமுறை காசோலையை பட்டுவாடா செய்ய தேவையான தொகையிலிருந்து ரூ.20000/- குறைவாக உள்ளது. ஆனால் அதே கிளையில் அவர் வைத்திருந்த சேமிப்பு கணக்கில் ரூ.5,000/-மும் அவர் வைத்திருந்த வைப்புநிதி கணக்கில் (அதனுடைய காலம் முடிவடைய இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன) ரூ.50,000/- இருந்தது.
வாடிக்கையாளருடைய மூன்று கணக்குகளிலும் உள்ள ஒட்டுமொத்த நிலுவை தொகை (Aggregate positive balance) காசோலை தொகையான ரூ.1.00 லட்சத்திற்கு கூடுதல் என்றாலும் அவர் காசோலை வழங்கியிருந்த வர்த்தக நடைமுறை கணக்கில் தேவையான தொகை இல்லாததால் காசோலையை பட்டுவாடா செய்ய வேண்டிய கடமை வங்கிக்கு இல்லை.
இன்னும் சில கடமைகள் அடுத்த பதிவில்..

Subscribe to:
Posts (Atom)